ஆசிரியப்பார்வை

“தேசியத் தலைவரின் அரசியல் பாதை“ – விக்கி சொல்வது போல் தவறானதா?

cm 2

“பிரபாகரன் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் சாவையும் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெறவேண்டிய அவசியம் என்றுமே அவருக்கு இருந்ததில்லை” இது அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனக்கெதிராக தமிழரசுக்கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்ட பதிலறிக்கையில் குறிப்பிட்ட கருத்து.

Read More »

தமிழர் தரப்பு அரசியலின் பலவீனம் – பி.மாணிக்கவாசகம்

TNA-456ser

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, உதயசூரியன் சின்னத்தைப் பொதுச்சின்னமாக ஏற்று புதிய அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே இந்த அணி உருவாக்கப்படுகின்றது என அறிவித்துள்ளது.

Read More »

தாயக வானில் ஒரு துருவநட்சத்திரம்!

thalaivar 2

1954 நவம்பர் 26 – தாயக வானில் மெல்ல இன ஒடுக்குமுறை என்ற கருமேகங்கள் குவிய ஆரம்பித்த காலம். 24 மணி நேரத்தில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படும் என்ற கோஷத்துடன் சிங்கள தேசியம் அப்பட்டமான வகுப்புவாதமாக உருமாற்றிக்கொண்டு தீவிர வளர்ச்சி பெற்ற நாட்கள் அவை.

Read More »

பெண் போராளிகளை இழிவுபடுத்தி யாழில் நூல்?! (விகடனுக்கு திறந்த மடல்) (இணைப்பு 2)

vikatan2 copy

முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக புனைவு ஒன்றை எழுதி உண்மைபோல ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்த சிவமகாராசா அருளினியன் தமிழ்த் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து அதனை யாழ்ப்பாணத்தில் வெளியிடுகிறார் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த பதிவு வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விகடன் ஆசிரியர் குறித்த சம்பவம் மாணவப்பத்திரிகையாளர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தாக தெரிவித்து அன்றைய அதிர்வலைகளை தணிவித்திருந்தார்.

Read More »

சிக்கலுக்குள் சிக்கியது அமைச்சர்களா? முதலமைச்சரா? (ஆசிரியப்பார்வை)

newe2

தமிழ்மக்கள் மத்தியில் அண்மைய நாட்களாக பேசுபொருளாக மாறியிருப்பது வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் தொடர்பிலான விசாரணைக்குழு பரிந்துரையும் சில ஊடகங்கள் அவற்றுக்குக் கொடுத்த முக்கியத்துவமும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லாத சமூகத்தில் வாழ்ந்த மக்கள் இந்த விடயத்திற்கும் தண்டனையை எதிர்பார்ப்பதை இம்மியளவும் நிராகரிக்க முடியாது. அது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா என்பதாகவோ அல்லது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் என்பதாகவோ இருக்கலாம் ஏன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனாக இருந்தால் கூட குற்றம் இழைத்திருந்தால் இழைக்கப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளவே முடியாது. தப்பித்துக்கொள்ளவும் கூடாது. ஆனாலும், ...

Read More »

சோரம்போன கலைஞரும்; விலைபோகாப் பெருந்தலைவனும்!

தக

வீழ்ந்துபட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களதும் உலகத் தமிழர்களதும் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் விசுவாசிக்களாகச் சொல்லிக்கொள்கின்ற ஒரு அணி சமூக வலைத்தளங்கள் ஊடாக தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும் ஈழவிடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளையும் கொச்சைப்படுத்தி மிகக் கேவலமான பரப்புரை நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது. தமிழனுக்கு உலகில் முகவரி தந்த தேசியத்தலைவர் அவர்களையும் அவரின் போரியல் நடவடிக்கைளையும் இழிவுபடுத்தும் நபர்கள் தெரிவுக்கும் கருத்துக்களுக்கான சரியான பதில் வழங்கவேண்டிய கடப்பாடு தமிழ்லீடர் இணையத்தளத்திற்கு உண்டு என்ற அடிப்படையில் ஆசிரியர் பீடம் பதிவு ஒன்றினை முன்வைக்கின்றது, (25-07-2013 ...

Read More »

சுதந்திரமும் சுமந்திரனும்!

suma-editorial frame

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கலந்துகொள்ளும் என்று சுதந்திர தினத்துக்கு சில நாட்களுக்கு முன்பு பெருமையுடன் தெரிவித்திருந்தார். அவர் கூறியதோடு நில்லாமல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் சுதந்திர தின நிகழ்விலும் கலந்துகொண்டார். சுமந்திரனைப் பொறுத்தவரையில் சுதந்திர தினத்தைக் கொண்டாட அவருக்கு தகுதியும், உரிமையும் உண்டு. ஏனெனில் அவர் பல விதங்களில் சுதந்திரம் பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவர் ஜனாதிபதியாக இருந்தபோதே கிரிக்கற் விளையாடவும், ...

Read More »

வீரத்தலைவனின் ‘இறுதிக்கணங்களை’ படம்போட்டுக் காட்டிய வித்தி!

vithi

ஈழத்தமிழர் அரசியலானது தனிநபர்களின் சுயநலன்களுக்காகவும் ஏனையவர்களின் நலன்களுக்காகவும் களவாடப்படுகின்ற புதிய அரசியற்பரப்பிற்குள் நகர்த்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று தாயகம் எங்கும் எதிர்வரும் பொதுத்தேர்தல் பற்றியும் அதற்கான தயார்படுத்தல்கள் எனவும் பச்சோந்திகளின் அரசியல் படமெடுத்தாடுகின்றது. இந்தவேளையில்தான் முன்னைநாள் ஊடகவிற்பன்னர் என தனக்கு தானே மணிமகுடம் சூட்டிக்கொண்ட வித்தியாதரனின் அடுத்த காய்நகர்த்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. முன்னைநாள் போராளிகளை ஒருங்கிணைத்து அதன் ஒருங்கிணைப்பாளராக தானே நின்று புதிய அரசியல்பாதையை உருவாக்கப்போவதாக பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த திலீபனின் தியாகப்பயணம் மேற்கொண்ட வீதியில் தியானம் செய்து ...

Read More »

சோவியத் ஒன்றிய வெற்றியின் 70 ஆம் ஆண்டு நினைவுகள்

soviyath

ஜேர்மனிய நாசிப்படைகள் சோவியத் ஒன்றியம் மீது தொடுத்த பிரமாண்டமான ஆக்கிரமிப்பு போர் முறியடிக்கப்பட்டு, நாசிப்படைகள் விரட்யடிக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு விழாவை ரஸ்யா மொஸ்கோவில் கொண்டாடியது. ரஸ்யாவின் உக்ரேன் தொடர்பான நடவடிக்கைகளை கண்டிக்கும் முகமாக இவ்விழாவில் மேற்கு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளாத போதிலும், இவ்விழா பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் சிறப்பாக நடைபெற்றது. சீன, இந்திய ஜனாதிபதிகள் கலந்து கொண்டு இராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொண்டனர். 1917 ஆம் ஆண்டு ஜார் மன்னரின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற சோவியத் யூனியன் பொதுவுடமை ...

Read More »

ஆறா ரணங்களின் ஆறாண்டுகள்!

leader

முள்ளிவாய்க்கால் பேரழிவின் தடங்களை கடந்து ஆறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தனது சுதந்திரத்திற்காக போராடிய ஒரு இனம் கண்மூடித்தனமாக வெறித்தனமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடிய போரில் சிதைக்கப்பட்டது. அடிப்படையான மனிதநேயங்கள் மறக்கடிக்கப்பட்டு உலக போர் தர்மங்கள் மீறப்பட்டு சர்வதேச கண்காணிப்புகளை விரட்டியடித்து ஒரு கறுப்புத்திரையிடப்பட்டு மூடப்பட்ட போர்வலயத்திற்குள் சிக்கவைக்கப்பட்ட ஒரு இனத்தின் ஆன்மா மீள உயிர்த்தெழக்கூடாது என்ற நோக்கோடு குதறப்பட்டது. சர்வதேச நாடுகள் அனைத்தினதும் நெருக்கடியான தடைகளுக்கு மத்தியில் வரையறுக்கப்ட்ட வளங்களுடன் போராடிய ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்டம் சிறுமைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டது. அன்றைய அமெரிக்கா ஏகாதிபத்திய ...

Read More »