பார்வைகள்

நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை – நிலாந்தன்

0-02-06-4a0a9381a59008acd72a01f1ad408b7b49571650fdeec6f231d99527818c24a1_20260f7b

திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமை கோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமை கோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும் பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒரு விளக்கம் தரப்பட்டது. அது போலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை ...

Read More »

மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா? -கே. சஞ்சயன்

images

அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தியுடனான சந்திப்பு என்பன, ஒன்றிணைந்த எதிரணியை உற்சாகப்படுத்தி இருக்கின்றன. “புதுடெல்லியில் இந்திய அரசாங்கம், மஹிந்தவுக்கு இராஜ உபசாரத்தை அளித்தது. மஹிந்தவின் ‘கட்அவுட்’கள் கட்டப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது” என்று பெருமிதம் வெளியிட்டிருந்தார் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ். “புதுடெல்லியுடன் இருந்த தவறான புரிதல்கள் களையப்பட்டு, சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார் கெஹலிய ரம்புக்வெல. ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு – இரா. சம்பந்தன் விசேட செவ்வி,நேர்கண்டவர் – ரொபட் அன்டனி

625.500.560.350.160.300.053.800.900.160.90

வட மாகாண சபை  தொடர்பில்  ஒரு பொதுவான அபிப்பிராயம் உள்ளது. அதாவது   இன்னும் கூடுதலான  கருமங்களை  வட மாகாண சபையில் நிறைவேற்றியிருக்கலாம் என்ற ஒரு அபிப்பிராயம்   காணப்படுகின்றது. அந்தவகையில்  இன்னும் கூடுதலான கருமங்கள் நடைபெற்றிருந்தால்   அது எங்களுக்கு சந்தோஷத்தை தந்திருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்  தெரிவித்தார். விசேட செவ்வியிலேயே  அவர் இதனைக் குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு: கேள்வி: இந்திய விஜயத்தின் போது  அந்நாட்டு பிரதமருடனான சந்திப்பு எவ்வாறு அமைந்தது? பதில்: நாங்கள் இந்தியப் பிரதமரை ...

Read More »

சியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் – அ.நிக்சன்

Indian Prime Minister Narendra Modi (R) accompanied by Israeli Prime Minister Benjamin Netanyahu (L) visit the Yad Vashem Holocaust memorial museum in Jerusalem on July 4, 2017.   / AFP PHOTO / POOL / ABIR SULTAN

இஸ்ரேல் நாட்டின் குடிகளில் இருபது விகிதத்துக்கு மேற்பட்டோர் யூதர் அல்லாத அரேபியர்கள். இந்த வருடம் வரை அங்கு அரேபிய மொழிக்கு இரண்டாவது உத்தியோக பூர்வ மொழி என்ற அந்தஸ்து இருந்துவந்தது. ஆனால், யூலை மாதம் கொண்டுவரப்பட்ட ‘அடிப்படைச் சட்டம்’ (Basic Law) என்ற சட்டவாக்கம் இந்த அந்தஸ்தை யாப்பு ரீதியாகக் குறைத்துள்ளது. தற்போது ஹீப்ரு (எபிரேயம்) மட்டுமே அரச மொழி. அடுத்தபடியாக, இன ரீதியான யூதக் குடியேற்றங்களைப் பரப்புதல் என்ற கோட்பாட்டை தேசியப் பெறுமானமாக்கி (national value) குறித்த சட்டவாக்கம் பெருமிதம் காண்கிறது. அரச காணிகளில் ...

Read More »

விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்

sumanthiran-vigneswaran

தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன. சுய அடையாளத்தோடு எழுந்து வருவது சார்ந்தோ, நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்தோ, எந்தவொரு தரப்பும் கடந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் நின்றுகொண்டுதான், ...

Read More »

விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்

625.500.560.350.160.300.053.800.900.160.90-2-26

யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். “முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் ...

Read More »

ஆட்சித் திறன் – – அரசியல் மாண்பு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்- கருணாகரன்

k2

கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொடர்பாக அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப் போவதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்திருக்கிறார். சபையைப் பற்றி சில ஊடகவியலாளர்கள் கடுமையாக விமர்சிப்பதால் சபையைத் திறம்பட இயக்குவதற்குச் சிரமமாக உள்ளது எனவும் இதனைத் தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர். கடந்த 10.-8.2018 திங்கட்கிழமை கரைச்சிப்பிரதேச சபையின் ஏழாவது அமர்வின்போது தவிசாளர் விடுத்த அறிவிப்பு இது. சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுமளவுக்கு “ஊடகவியலாளர்கள்” யாரேனும் தவறான செய்திகளையும் கட்டுரைகளையும் அறிக்கையிட்டிருந்தால், அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அவர்கள் செயற்பட்டிருந்தால் அவற்றைத் தகுந்த ...

Read More »

மகிந்த சேர்த்த கூட்டம் – நிலாந்தன்

40773615_1078070729038355_5635615838225563648_n1

கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில்  அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை. கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட ...

Read More »

ஆர்ப்பாட்டத்தின்போது மஹிந்த, கோட்டபய அணியின் மக்கள் பலத்தைக் கண்டு அமெரிக்கா அச்சமடைந்ததா அல்லது ஆதரவா – அ.நிக்சன்

dav

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதை கொழும்பில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கத் தூதரகம் தமது ரூவீற்றர் தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. பாரிய அளவில் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் மூலம் மஹிந்த ராஜபக்ச ...

Read More »

முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும் – நிலாந்தன்

40343017_2117766535106921_8671123883509678080_n1

மாகாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் ...

Read More »