செய்திகள்

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ; போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் அழைப்பு

tamil-news-pa-2

நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை ...

Read More »

காந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு

7M8A2288

முல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு, நேற்று நடைபெற்றது. இதன்போதே,  உறுப்பினர்களான சின்னராசா – லோகேஸ்வரன் மற்றும் தவராசா – அமலன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனினும், ஏனைய உறுப்பினர்கள் இந்த நினைவேந்தலுக்கு ஆதரவளித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று, மகாத்மா காந்திக்கு முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த இரு உறுப்பினர்களான லோகேஸ்வரன் மற்றும்  ...

Read More »

ஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி

my3pala

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபை மாநாடு உள்ளிட்ட அரச வைபவங்கள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்கா பயணமானார். எதிர்வரும் 24ம் திகதி வரையில் இடம்பெறவுள்ள போதைப்பொருள் பிரச்சினை தொடர்பாக உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கான சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். அன்றைய தினம் இடம்பெறவுள்ள நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். அந்த மாநாட்டில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார். எதிர்வரும் புதன்கிழமை நோய் தொடர்பான விசேட செயலமர்விலும் பங்கேற்க ...

Read More »

ஜனாதிபதி – முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிரான சதித்திட்டம்:முழுமையான விசாரணைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

30-1451469158-ranil56-1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்த பாய ராஜபக்ஷ ஆகியோரை படு கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பிலான விசாரணைகள் குறித்து பிரதமர் ரணில்விக்ரமசிங்க அறிக்கையினைக் கோரியுள்ளதுடன், தொலைபேசி அழைப்பு தொடர்பான விபரங்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயளாலரை படுகொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இதுவரைக் காலமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் ...

Read More »

காணாமல் போனோர் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு விசேட குழு நியமனம்

download

காணாமல் போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான விசேட உபகுழுவொன்றினை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் மேலும் 9 அமைச்சர்கள் அடங்கலாக மேற்படி உபகுழு அமைக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் சரத் அமுணுகம, ரவூப் ஹகீம், வஜிர அபேகுணவர்தன, மஹிந்த அமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, பழனி திகாம்பரம், தலதா அதுகோரள, மனோ கணேஷன், மஹிந்த சமரசிங்க ஆகியோர் குறித்த உபகுழுவில் அங்கம் வகிக்கின்றனர். காணாமல் போனோர் ...

Read More »

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வெற்றிக்கிடைக்காது: சந்திம வீரகொடி

625.320.560.350.160.300.053.800.868.160.90

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வெற்றிக்கிடைக்காது என  தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி , நல்லாட்சியின் சில தீர்மானங்கள்  மிகவும் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்கள் நால்வரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளமை குறித்து வினவுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில், தொகுதி அமைப்பாளர் பதவிலிருந்து நீக்கியது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சுதந்திர கட்சியால் முன்னெடுக்கப்படும் சில தீர்மானங்கள் கவலையளிக்கக் ...

Read More »

பெண் விரிவுரையாளர் கொலையில் சந்தேகநபர் ஒருவர் கைது

arrest

பெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணை செய்த போது பெண் விரிவுரையாளரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகம் ஏற்பட்டு கைது செய்யப்பட்டுள்ளாார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். வவுனியா, ...

Read More »

அரசாங்கத்தின் இயலாமை ரூபாவின்வீழ்சியின் வெளிப்பாடு – மஹிந்த

28-1435483405-rajapaksa9-600

அரசாங்கத்தின் இயலாமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், நாடு தற்போது அதலபாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறது. அனைத்துதுறைகளுமே மிகவும் மோசமான வீழ்ச்சிகளையும் நிர்வாக சீர்கேடுகளையும் சந்தித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது,தற்போதைய அரசாங்கத்தினால் முடியாத காரணமாகும். எனவே, தேர்தல் ஒன்றின் ஊடாக தீர்வுகாண முடியும்.

Read More »

தமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

625.0.560.320.160.600.053.800.700.160.90

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது கடமைகளை முடித்து விட்டு  பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் நேற்றுக் காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று  பகல் அவரது சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண்ணான விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் ...

Read More »

மாகாண சபை எல்லை மீளாய்வு அறிக்கை காலதாமதமாகும் என அறிவிப்பு

Karu-Jayasuriya-98

மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் இரண்டு மாத கால அவகாசம் தேவை என மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்விற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேலும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவைப்பாடு உள்ளமையினாலேயே இந்தக் கால அவகாசம் தேவை என்றும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே எல்லை நிர்ணயம் தொடர்பான குழு விடயத்தை தெரிவித்துள்ளது.எவ்வாறிருப்பினும், ...

Read More »