கூர்மை

“நான் காயத்தோடையும் பிள்ளைய தேடித்திரிஞ்சன்…“!

kaanavi

பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்த உபகரணங்களையும் இழந்து வன்னிப் போரின் இறுதிநாட்களிலும் முள்ளிவாய்க்கால் கனிஸ்ரவுயர்தர பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை அது. அங்கு மண் போட்டால் மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.

Read More »

முள்ளிவாய்க்காலைச் சுற்றி நடப்பது என்ன?!

mullivaikkal

கன்னை பிரிந்து சண்டையிடும் பங்குப் பொருளாகியிருக்கிறது மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வு. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் – வடக்கு மாகாண சபைக்கும் நடக்கும் இந்தப் பிரச்சினை சமரசத்துக்கு – தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.

Read More »

‘ஐயோ நான் சாகப் போறன்… நான் செத்து போவன்’ – கர்ப்பிணித் தாய் சுபாசினி

kavi 1

இன்றைக்கும் நெஞ்சை அழுத்தும் பாரத்தை தரும் பல நிகழ்வுகள் நிறைந்து கிடக்கிறது. அதில் சுபாசினி என்ற கர்ப்பினிப் பெண்ணை மறக்க முடியாது. அந்தப் பெண் துடிப்புள்ளவள் எதிர்காலத்தை நிதானமாக கணிக்கக் கூடியவள் அதனால் அடிக்கடி “நான் செத்துடுவன் …. நான் செத்துடுவன் “ என பயந்து கொண்டிருந்தாள்.

Read More »

“புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்” – கஜேந்திரகுமார் கண்டுபிடிப்பு!

கஜே

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த சிறுவர்கள் வறுமைகாரணமாகவே போராட்டத்தில் இணைந்துகொண்டதாகவும் பதினெட்டுவயது வரையில் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களை போருக்கு விடுதலைப்புலிகள் அனுப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐநாவின் பக்க நிகழ்வுக் கூட்டம் ஒன்றில் குழந்தைப் போராளிகள் தொடர்பாக கஜேந்திரகுமார் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த நிலையில் அவ்விடயம் தொடர்பாக கஜேந்திரகுமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவ்விளக்கத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த சிறார்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையாலேயே இணைந்ததாகவும் இன்னும் சிலரை விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் ...

Read More »

காற்றில் கரைந்த த.தே.மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியம்!

gajendra

சமீபத்தில் நெஞ்சைத் தைத்தது ஒரு பதிவு. “1990 முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing) தான். இல்லை என்போர் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை genocide) எனக் கூறும் யோக்கிதை அற்றவர்கள்” என்பதாக அந்தப் பதிவு அமைந்தது. இந்தப் பதிவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் அதனைக் கூறியிருப்பவர் சட்டத்துறையின் தலைவர் – அதுவும் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து இத்தகைய பதிவை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், பதிவிட்டவர் அவரேதான் குமாரவடிவேல் குருபரன் – யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவர்.

Read More »

“வடக்கு அரசியல்“ – நடக்கப் போவது என்ன? – தமிழ்லீடருக்காக வித்தகன்

viky

மீண்டும் ஒரு தேர்தல் பரபரப்புக்கு இலங்கை தயாராகி விட்டது. ஆம்… மாகாண சபைத் தேர்தல் வரும் மே மாதம் அறிவிக்கப்படவுள்ளது. நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி விட அரசாங்கம் எத்தனிக்கிறது. இந்நிலையில் தமிழ்க் கட்சிகள் சில ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க தீவிரமாக உழைத்து வருகின்றன. இந்தப் புதிய கூட்டணியின் மையமாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் – தமிழ் மக்கள் பேரவையினரும் உள்ளனர்.

Read More »

மைத்திரி – ரணில் தேசிய அரசு ”தப்பிப் பிழைத்தது” எப்படி?

mai-ranil

தேர்தலின் பின்னரான அரசியல் குழப்பநிலை இப்போது ‘அமைச்சரவை மாற்றம்’ என்ற நிலைக்கு இறங்கி வந்திருக்கின்றது. அரசு கவிழுமா என்ற கேள்விக்கும், “இல்லை” எனத் தெளிவான பதில் கிடைத்துள்ளது. “பிரதமர் ரணிலை பதவி நீக்கம் செய்வோம், தனியாக ஆட்சியை அமைப்போம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் முன்னெடுத்த நகர்வுகளும் முடிவுக்கு வந்துவிட்டன. உயர் நீதிமன்றத்தின் விளக்கம் வரும் வரையில் பொறுத்திருப்போம் என இப்போது அவர்கள் தம்மைத்தாமே சமாதானம் செய்துகொண்டுள்ளார்கள்.

Read More »

“யாழ்.மாநகர சபை”; அரசியல் பித்தலாட்டங்கள் – வித்தகன்

vithakan 2

யாழ்ப்பாணம் மாநகர சபையில் எந்தக் கட்சி ஆட்சி செலுத்துவது என்ற விவகாரத்தில் சூடு இன்னமும் தணியவில்லை. இதற்கிடையே தமிழரசுக் கட்சி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “இமானுவல் ஆர்னோல்ட்டே முதல்வர்” என அறிவித்து அந்தச் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்தது. ஆர்னோல்ட் முதல்வர் ஆவதில்  சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் பலமாக உள்ளன – இப்போதும்கூட. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சொலமன் சூ சிறிலை முதல்வராக்க கட்சிக்குள் சிலர் முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சியை சுமந்திரன் முளையிலேயே கிள்ளிவிட்டார். சொலமன் சூ ...

Read More »

“கொழும்பு பரபரப்பு” முடிவுக்கு வருவது எப்போது?

K.K

உள்ளுராட்சி மன்றங்களுக்காக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் மைத்திரி – ரணில் கூட்டாட்சியில் கலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுமா என்ற அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இனித் தொடரப்போவது ஐ.தே.க. அரசாங்கமா அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. இரண்டு தரப்புக்களுமே தனியான அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சி செய்தாலும், இருவருக்கும் உள்ளது ஒரே பிரச்சினைதான். அதாவது, இருவருக்குமே தனியான அரசை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லை. 

Read More »

“முடிந்த தேர்தலும் தொடங்கிய குழப்பங்களும்.”. – நிலாந்தன்

Nilanthan

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது.

Read More »