32149355651_3e6cc6f869_b

இந்தியா பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்ததா?

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது, அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தொடர்பைக் கொண்டிருந்ததாக பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

dailypioneer.com என்ற ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.போரின் இறுதி கட்டத்தின்போது, அப்போதைய இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபாகரனுக்கு தகவல் ஒன்றை வழங்கியிருந்தாகவும், அவரைக் காப்பாற்ற இந்திய கடற்படை வரும் என்றும், அதற்காக காத்திருக்குமாறும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரபாகரன் காட்டுப் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி நகர்ந்தாகவும், எனினும், இலங்கை கடற்படையே அங்கு சென்றதாகவும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.இந்திய கடற்படைக் கப்பல் புறப்படத் தயாராகியிருந்த போதும், அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்தக் கப்பல் புறப்படவில்லை.

எனினும், குறித்த திட்டம் மாற்றப்பட்டமை தொடர்பில் அப்போதைய காங்கிரஸ் தலைமையினால், பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அவரால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக dailypioneer ஊடகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*