42224011_329706357589830_8281057827020079104_n

சமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் – ஆனந்தசங்கரி

தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்மந்தன் தனது எதிர்க் கட்சி தலைவர் பதவியை ஒரு நாள்  எனக்கு தந்தால் அதன்  அப்பதவியின் பெறுமதியை உணர்த்துவேன்.அப்பதவி மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதனை காட்வேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இன்று 20-09-2018 கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

சம்பந்தன் பதவியை துறந்து ஒருநாள் பதவியை தந்து பார்க்கட்டும் அவரது பதவியிலிருந்து எவ்வாறானவற்றை சாதிக்கலாம் என காட்டுகிறேன்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தான் 2004ம் ஆண்டு முதல் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையிலேயே வலியுறுத்தி வந்துகொண்டிருக்கின்றேன். ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக்கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். ஒப்பந்தம் அது சுட்டிக்காட்டுகின்றது. அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துவரும் அவர்கள் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்த தவறியுள்ளனர். அரசாங்கத்தை தாம்தான் காப்பாற்றுவதாகவும், தம்மால்தான் அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும்  அடிக்கடி  கூறிக்கொள்ளும் சம்பந்தன் இப்போதுதான்  சொல்கின்றார்  பிரதமருடனும், ஜனாிபதியுடனும் அரசியல் கைதிகள் விடயத்தில் பேசப்போகின்றாராம்.
அப்படியானால் இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள். உங்களால் முடியாவிட்டால் எனக்கு தாங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் தந்து பாருங்கள். அப்பதவியின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதை காண்பிக்கின்றேன். எனத் தெரிவித்த அவர்
நாளுக்கு நாள் பொருட்கள் சேவைகளின் விலைகள் அதிகரிக்கரித்து செல்கிறது ஆனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சி வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கிறது. சமந்தன் அவர்களுக்கு இவ்வாறு அமைதியாக இருக்கவே இந்தப் பதவி வழங்க்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி
இன்று சமஸ்டி தொடர்பில் பேசுகின்றார்கள். ரணில் விக்ரமசிங்க அன்று  தனது தேர்தலில் சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்டார். அக் காலத்தில் பல்வேறு தரப்பினரிடமும் பணத்தை பெற்றுக்கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு  வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்தனர்.அவ்வாறு இருந்தபுாதும் 49 வீதமான மக்கள் சமஸ்டிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அத்தோடு  இறுதி யுத்தத்தை தலைமைதாங்கி நடத்திய படைத்தளபதியான சரத்பொன்சேகா 2009 மே மாதம் பிரகாகரனை கொன்றுவிட்டதாக அறிவித்தார்.  அதே சரத்பொன்சேகாவுக்கு 2010 ஜனவரியில் வாக்களிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர்.எனவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*