sri

புதிய இராஜதந்திரிகள் நால்வர் தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் நால்வர் இன்று முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

சுவிட்சர்லாந்து, கௌதமாலா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும், மலேசியா, சாம்பியா நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்று வருகை தந்துள்ளனர்.

அவர்களின் பெயர்கள் விபரங்கள் பின்வருமாறு,

01. ஹேன்ஸ்பீட்டர் மோக் – சுவிட்சர்லாந்தின் தூதவர்.

02. கியோவானி ரெனெ கஸ்டில்லோ – குவாதமாலா தூதர்.

03. டான் யங் தாய் – மலேசிய உயர்ஸ்தானிகர்.

04 .ஜூடித் கங்கோமா கபிசிம்பங்கா – குடியரசு ஜாம்பியாவின் உயர்ஸ்தானிகர்.

புதிய இராஜதந்திரிகளிடையே உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச ஒத்துழைப்புடன் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கான இலங்கையின் பயணத்தில் புதிய இராஜதந்திரிகளின் உயர் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுமென தான் நம்புவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*