jayakumar__12379

ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உறுதியாக உள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

rajiv-murderராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு உறுதியாகவுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு குறித்து  செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே  ஜெயக்குமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு உறுதியாகவுள்ளது  உச்சநீதிமன்றின் தீர்ப்பின் விபரம் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தீர்ப்பை பெருமகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன் என ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

27 வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் எடுக்கவேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதாவது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*