ராஜித மகனின் திருமணம் : அலரிமாளிகைக்கு வழங்கப்பட்ட தொகை 21 இலட்சத்து 80 ஆயிரம்

அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமணம் தொடர்பில் மஹிந்த தரப்பினர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் ‘அங்கீகரிக்கப்பட்ட சில விதிமுறைகளுக்கு அமையவே, அதாவது வெளிவாரியான நிகழ்வுகளுக்கு வழங்கப்படுகின்ற கட்டணங்களுக்கு அமையவே குறித்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டது என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர்  நளின் பண்டார தெரிவித்துள்ளார்..

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அவர்,

அலரிமாளிகையில் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்த மண்டபம் ஒன்று காணப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமணத்தை அலரிமாளிகை வளாகத்தில் நடத்துவதற்கு பிரதமர் அலுவலகத்தால் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த அனுமதியானது இலவசமாகவோ அல்லது மக்களின் பணத்தை முறையற்ற வகையில் கையாளும் விதத்திலோ வழங்கவில்லை.

இங்கு திருமணம் நடத்துவதற்காக 21 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.

இதற்கமையவே இந்த திருமணம் நடத்தப்பட்டது. ஆனால் மஹிந்த தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே அலரிமாளிகை தன்சல சாலை போன்று காட்டசியளித்ததை மறந்து விட்டார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*