8d8035a28add9b3698c56f11089158e3_XL

நாளை யாழில் வரவு செலவு திட்டத்திற்கான பொது மக்களின் கருத்துக்கள் பெறப்படுகிறது

அரச நிதி தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு 2019 வரவுசெலவுத் திட்டத்திற்கான பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பமாகியுள்ளன.

பாராளுமன்ற அமர்வைப்போன்று இது இடம்பெறுகிறது என்று தெரிவுக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று மக்களின் கருத்துக்களைப் பெறும் பணிகள் ஆரம்பமாகின.

இதில் தெரிவுக் குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் 18 உறுப்பினர்களின் பங்களிப்புடன்; கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக நாளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மக்களின் கருத்துக்கள் பெறப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் காலை 9.30 மணிக்கு இது இடம்பெறும்.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத் திட்டத்திற்கும் அதன் பின்னரும் நிதி முன்மொழிவுகளை அவதானித்து செயற்படுத்தும் வகையில் இக்குழு புதிதாக உருவாக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*