D8C15580-3E54-484B-9D40-FEDDA68CE472

எமக்கு உயிர் வாழ தண்ணீர் இல்லை உமக்கு வியாபாரத்திற்கு வேண்டுமா!

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் செப்டம்பர் 7ம் திகதி கடை அடைப்பிற்கு தயார் ஆகவேண்டும், என “முற்போக்கு தமிழர் அமைப்பு” வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்

 இது ஒரு குறித்த சமூகத்திற்கான போராட்டம் இல்லை இது ஒட்டுமொத்த சமூகத்திற்கான போராட்டம் சகல பேதங்களுக்காப்பால் ஒன்று சேர்வோம். எனவும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கூறியிருக்கிறார்.

போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும், சூழலுக்கு விரோதமாக அமைக்கப்படும் இத் தொழிற்சாலை தேவையற்றது எனவும், சில வாரங்களுக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையொப்ப வேட்டையும் நடைபெற்றது. என அக் கிராம வாழ் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

3F179828-02A0-4BB5-BA80-495F25307EF6

3ED4B402-CDCF-433A-A40B-A08F3B507F77

52FB562D-2848-48DF-850C-76BD94234A8A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*