022222

ஜனநாயகத்திற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு இந்திய பிரதமர் பாராட்டு

இலங்கையின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி, நல்லிணக்கம், நிலைபேறான சமாதானம் என்பனவற்றை கட்டியெழுப்ப பதவியேற்ற நாள் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றும் பணிகளைப் பாராட்டுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்பஇ பொருளாதார ஒன்றியம் பிம்ஸ்டெக்  அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் நேற்று (30) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி யுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய பிரதமர் எதிர்வரும் செப்டம்பர் 03ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதியின்; பிறந்த தினத்திற்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அத்துடன் நான்காவது பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில் அதன் தலைமைத்துவம் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளமை தொடர்பில கருத்துத் தெரிவித்த இந்திய பிரதமர் பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வழங்கப்படும் எந்தவொரு பணியையும் உரியவாறு நிறைவேற்ற தான் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மிகுந்த அனுபவமுடைய அரசியல் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் பிம்ஸ்டெக் அமைப்பு பெரிதும் பலப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்த இந்திய பிரதமர் அதனூடாக பிம்ஸ்டெக் மாநாட்டின் நோக்கினையும் குறிக்கோளையும் அடைவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*