shehan-semasinghe-400-seithy

மாகாண சபை தேர்தல் ஜனவரியில் இடம் பெறுவது சாத்தியமற்றது

மாகாண  சபை தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் பொது  எதிரணியினர்  எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று  அரசாங்கம் குறிப்பிடுவது அரசாங்கத்தின் குறைப்பாடுகளை மூடி மறைப்பதாகும்.

எல்லை நிர்ணய அறிக்கையினை  நாம் ஆரம்பத்தில் இருந்தே  எதிர்த்துள்ளோம் இதுவொன்றும் புதிதல்ல என தெரிவித்த  கூட்டு எதிரணியின் பாராளுமன்ற  உறுப்பினர் செஹான் சேமசிங்க

அரசாங்கத்தின் பிரதான நோக்கம் மாகாண சபை தேர்தலை நடத்தாமல்  நேரடியாக ஜனாதிபதி தேர்தலை  நடத்துவதே ஆகவே  ஜனவரியில் மாகாண சபை  தேர்தல் இடம் பெறும் என்று குறிப்பிடுவது சாத்தியமற்ற விடயம் என தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொது எதிரயிணின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*