arumugan

பதவி விலகினார் ஆறுமுகன் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் விலகியுள்ளார். இ.தொ.க. தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடலின் போதே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இ.தொ.க. தலைவராக செயற்பட்ட முத்துசிவலிங்கம் அப்பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, பொதுச் செயலாளராகவிருந்த ஆறுமுகன் தொண்;டமான் தலைமை பதவியையும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இன்று முதல் ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.க. தலைவராக மாத்திரம் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இ.தொ.க. பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*