download

சவால்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்து அபிவிருத்தி செய்கிறது நல்லாட்சி அரசு – ரணில்

எவ்வித சவால்கள் வந்தாலும் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் மூலநோக்கத்துடன் சமகால நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டுவருவருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மொனராகலையில் இடம்பெற்ற என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 2015ம் ஆண்டில் மாற்றத்திற்காக வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் பாடுபடுவதாகவும் அங்கு சுட்டிக்காட்டிய பிரதமர் இது என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் தெளிவாவதாகவும் குறிப்பிட்டார்.
தெளிவாக உணரக்கூடிய மாற்றத்தை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்வதற்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*