IMG_3792

கிளிநொச்சியில்  சடலமாக மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டார்

குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகதரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் காணப்பட்டுள்ளமயினால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட ஊடகவியலாளர் ஒருவரும் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இணைந்து கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரேனும் இன்று கடமைக்கு வரவில்லையா என வினவியிருக்கின்றனர்

இதன் போது  அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது  அதனை தொடர்ந்து ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவர்களிடம் விசாரித்ததன் பின்னர்குடும்பத்தவர்களை அழைத்துக்கொண்டு வைத்திய சாலைக்கு  சென்று சடலத்தை பார்வையிட்டு அடையாளம் காணப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரினால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

குறித்த பெண் கணவனால் கைவிடப்பட்டவர்  ஜந்து வயதில் மாற்றுத்திறனாளி பெண் குழந்தை ஒன்றும்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நேற்றிரவு(28) மாலை 7.15 மணிக்கு ஆடைத் தொழிற்சாலையில்  தனது கடமையினை  முடித்திருக்கின்றார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதோடு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*