kaanaamal aa

வடக்கை நோக்கி நகர்கிறது மன்னிப்புச் சபையின் பேரணி!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் பதிலை வலியுறுத்தி சர்வதேச மன்னிப்பு சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணி வடக்கை நோக்கி நகரவுள்ளது.

அதன்படி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை (வியாழக்கிழமை) குறித்த பிரசார பேரணி வடக்கு நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கை மற்றும் பதிலை கோரியும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரமொன்று சிவில் சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் சர்வதேச மன்னிப்பு சபையினால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பிரசாரத்தின் ஆரம்ப நிகழ்வு காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், அதில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது மூன்று கொள்கலன் லொறிகள், ’60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை அதற்கு பதிலலிக்காமல் இருப்பது ஏன் ஜனாதிபதி?’ என்ற வாசகத்துடன் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

குறித்த கொள்கலன் லொறிகளானது நேற்று கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பயணித்திருந்த நிலையில், இன்றைய தினம் காலி, மாத்தறை நோக்கி பயணிக்கவுள்ளது. அதனை தொடர்ந்து நாளை குறித்த கொள்கலன் லொறிகள் வடக்கு நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*