rape

கிளிநொச்சியில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு! (இணைப்பு, திருத்தத்துடன்)

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து இன்று காலை யுவதியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் குறித்த வயலுக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கு 20 வயதிருக்கும் என தெரிவித்த பொலிஸார் சடலத்தின் முகப் பகுதியில் காயங்கள் இருப்பதாலும் சடலமானது உள்ளாடைகளுடன் மீட்கப்பட்டுள்ளமையாலும் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் இராணுவ சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்பு பட்டி மற்றும் பேனைகள் ஆகிய தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிந்திய தகவலின் அடிப்படையில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டியைச்  சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றுபவர் என்றும் தெரியவந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*