Major-General-Amal-Karunasekara

முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்குதலில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் அமல் கருணாசேகரக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*