Gandhi

புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணத்தில் மகிழ்ச்சி இல்லை! ராகுல் காந்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை எனத் தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

ஜேர்மனியில் பாடசாலை ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், பிரபாகரன் மீதான வன்முறை அவரது பிள்ளைகளையும் மற்றவர்களையும் பாதித்தது. என்னுடைய பாட்டியும் (இந்திரா காந்தி) என்னுடைய தந்தையும் (ராஜிவ் காந்தி) கொல்லப்பட்டனர். இதனால் நானும் வன்முறையால் பாதிக்கப்பட்டேன். நான் எனது அனுபவத்திலிருந்தே பேசுகிறேன்.

வன்முறைக்குப் பிறகு நீங்கள் முன்னேற ஒரே வழி மன்னிப்பு. மன்னிப்பதற்காக நீங்கள் என்ன நடந்தது? ஏன் நடந்தது? என்பதை சரியாக அறிந்து புரிந்துகொள்ள வேண்டும்.

1991 இல் என் தந்தை பயங்கரவாதியால் கொல்லப்பட்டார். 2009 இல் என் தந்தையை கொன்ற ஒரு நபரை நான் இலங்கையில் பார்த்தேன்.

பிரபாகரன் கொல்லப்பட்டபோது நான் என் சகோதரியை அழைத்து இது வினோதமானது என்று சொன்னேன். அவர் சொன்னார் நான் இதில் மகிழவில்லை. இறந்தவர் என் அப்பாவைக் கொன்றவர் எனக் கொண்டாட வேண்டும். ஆனால் நான் எப்படியோ சந்தோசமாக இல்லை. இதையேதான் நான் அவருக்கும் சொன்னேன்.

உண்மையில் நான் சந்தோசப்படவில்லை. காரணம் அவரது பிள்ளைகளாக என்னைப் பார்த்தேன். இவ்வாறான மரணங்களின் போது உண்மையில் பிள்ளைகளே பாதிக்கப்படுகிறார்கள் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*