asian

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறும் வசதியை இழக்கிறது இலங்கை!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலகுக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் தகுதியை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை இழக்கின்றது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் அதிகரித்து வருகின்ற தனிநபர் மொத்த தேசிய வருமானம் ஆகியன காரணமாகவே இந்நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீள் வகைப்படுத்தலுக்கு அமைவாக இலங்கை, குறுப் – பீ எனப்படும் குறை வருமானுடைய நாடுகளின் வரிசையிலிருந்து குறூப் சீ எனப்படும் நடுத்தர வருமானமீட்டும் நாடுகளின் வரிசைக்கு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண மூலதன வளங்களில் இருந்து மாத்திரமே அடுத்தாண்டு முதல் கடன் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் இலங்கை குறூப் பீ நாடுகள் வரிசையில் உள்ளது. இதன்படி இலகு கடன்களையும் சாதாரண மூலதன வளங்களில் இருந்து கடன்களையும் பெறத்தகுதி உண்டு. இந்தநிலை குறூப் சீக்கு முன்னேறுவதால் மாற்றமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*