namal

தேர்தலில் வெல்ல நாமல் ரஷ்யாவுடன் ஒப்பந்தமாம்!

2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான அசாத் சாலி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் தொடர்பில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. எனவே அதுதொடர்பில் விசாரiணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச இந்த வருடத்தில் மாத்திரம் மூன்று தடவைகள் ரஸ்யாவிற்கு சென்றுள்ளார். இவர் 2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளார்’ என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*