mark-720x450 (1)

வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பிரித்தானியா முன்வருகை!

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பிரித்தானியா முன்வந்துள்ளது.

பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.

உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பிரித்தானிய அரசாங்கம் 10 இலட்சம்; பவுண்ட் நிதியுதவி வழங்கவுள்ள நிலையில், இதன்மூலம் மீளக்குடியமர்ந்த 600 குடும்பங்கள் வரை பயன்பெற உள்ளதாக அமைச்சர் மார்க் பீல்ட் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஜெனீவா பொறுப்புக்கூறல்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை ஊக்குவிப்பதில், பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கடந்தகால போரின் போதான பாதிப்புக்களை சமாளிக்கும் முயற்சிகளுக்கும், இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்தவும் பிரித்தானியா உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் நிதியுதவியின் மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில் மக்கள் மீளக் குடியமர்வதற்கு வழி ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் பொலிஸ் மற்றும் இராணுவ மறுசீரமைப்பு என்பன அடங்களாக சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை ஊக்குவிக்க பிரித்தானிய அரசாங்கம் தற்போது ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*