arrest

மட்டக்களப்பில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எண்மர் கைது!

மட்டக்களப்பில் சமுர்த்தி திணைக்கள நிதி மோசடி குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திணைக்கள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர், காசோலையில் கணக்காளரின் கையொப்பத்தை இட்டு இப்பணத்தை கையாடல் செய்தமை விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நேற்று (புதன்கிழமை) குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறாக மாவட்ட பிரதான சமுர்த்தி திணைக்களத்திற்கு சொந்தமான 57 இலட்சம் ரூபாய் நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிதி மோசடி கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில், கொழும்பில் உள்ள சமூர்த்தி திணைக்களத்திலிருந்து திணைக்களத்தின் சராசரி நிலுவையை பரிசோதித்து கொழும்புக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது சமுர்த்தி திணைக்களத்தின் வங்கிக் கணக்கு பரிசோதிக்கப்பட்டபோது, 57 இலட்சம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து மாவட்ட திணைக்கள கணக்காளர் மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவுசெய்துள்ளார்.

இதற்கமைய மட்டக்களப்பு பொலிஸ் பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேற்கொண்ட விரிவான விசாரணையின் பின்னர் சமூர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*