mahinda

மஹிந்தவின் ஊழல் மோசடிகள் தொடர்பில் பதினெட்டு வழக்குகள்?!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த 18 வழக்குகள் பூர்த்தியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கான நிதி மோசடி பிரிவினால் முன்வைக்கப்பட்ட 18 வழக்குகளின் விசாரணைகள் இதுவரை நிறைவடைந்துள்ளன.

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக ஆராய்ந்து விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட நீதிமன்றத்தின் ஊடாக இது சாத்தியமாகியுள்ளது.

எனவே, விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் பின் நிற்காது” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*