uthaya

கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக மஹிந்த அணி குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள உதய கம்மன்பில, ‘அரசியல் தீர்வுதான் தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் தீர்வு விடயத்திற்கு மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

சம்பந்தன் நாட்டிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர் கட்சி தலைவர் என்ற விடயத்தை ஒரு போதும் உறுதிப்படுத்தியதில்லை.

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிட்டு தமிழ் மக்களை கூட்டமைப்பினர் ஏமாற்றிவருகின்றனர்.

அத்துடன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க கூட்டு எதிர்கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும், அரசியல்தீர்வு தான் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திப்படுத்தும் என குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*