Mahinda-Deshapriya-e1375338496657

மாகாணசபைத் தேர்தல் – புதிய சட்டமூலம் தேவை என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர்!

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவதென்றாலும் புதிதாக சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவதென அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை. ஆனால் எந்த முறையில் நடத்துவதாக இருந்தாலும் புதிதாக சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

மேலும் இந்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்பது நடக்காத விடயம். எனினும் புதிய சட்டமூலம் ஒன்றின் மூலம் பழைய தேர்தல் முறைமையை மீண்டும் சட்டமாக்கினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

இங்கு புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னர், நடைமுறையில் இருந்து வந்த பழைய தேர்தல் முறைமை 1988 ஆம் இலக்க 2 ஆம் பிரிவு நீக்கப்படுகின்றது.

இதனால், மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதிலும் சிக்கல் நிலைமை காணப்படுகின்றது. புதிய முறையில் நடத்துவதானால், எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்” என மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*