ranil

தலைசிறந்த பொறியியலாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தே வந்தார்கள் – ரணில்!

ஒரு காலத்­தில் தலைசி­றந்த பொறி­யி­ய­லா­ளர்­கள் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்தே வந்­தார்­கள். அந்­தப் பொறி­யி­ய­லா­ளர்­க­ளில் யாழ்ப்­பா­ணம் ஹாட்­லிக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்­த­வர்­களே அதி­கம். இவ்­வாறு சொல்­வ­தற்கு இங்கு யாரும் கோவிக்­கக் கூடாது.

இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­தின் கிளி­நொச்சி வளா­கத்­தின் பொறி­யி­யல் பீடக் கட்­ட­டம் மற்­றும் மாண­வர்­கள், ஊழி­யர்­கள் விடு­தி­கள் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வால் நேற்­றுத் திறக்­கப்­பட்­டன. இந்­தக் கட்­ட­டங்­கள் 2 ஆயி­ரத்து 100 மீல்­லி­யன் ரூபா நிதிச் செல­வில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

நிகழ்­வில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, உயர்­கல்வி அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், த.சித்­தார்த்­தன், வடக்கு மாகாண அவைத் தலை­வர், வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள், பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர, கிளி­நொச்சி மற்­றும் வடக்கு மாகாண பொலிஸ் அதி­கா­ரி­கள், பல்­க­லைக் கழக விரி­வு­ரை­யா­ளர்­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

இங்கு உரை­யாற்­றிய தலைமை அமைச்­சர் ரணில், போர் கார­ண­மாக கடந்த காலத்­தில் இங்கு அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை. தெற்­கில் அபி­விருத்­தி­க­ளைச் செய்­தோம். போர் முடிந்த பின்­னர் இங்கு அபி­வி­ருத்­திப் பணி­களை முன்­னெ­டுக்­கின்­றோம்.

கிளி­நொச்­சி­யி­லுள்ள பாட­சா­லை­களை மிகச் சிறந்த பாட­சா­லை­க­ளாக மாற்­ற­வேண்­டும். இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் விரி­வு­ரை­யாற்­று­ப­வர்­கள் அப்­போ­து­தான் இங்கு தங்­கி­யி­ருப்­பார்­கள். அவர்­கள் தமது பிள்­ளை­களை இந்­தப் பாட­சா­லை­க­ளில் சேர்த்­துக் கொள்­வார்­கள் – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*