Mahinda-Deshapriya-e1375338496657

மஹிந்த அணியை சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல் பிற்போடப்படுவதற்கான காரணம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதமே தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணம் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கவுள்ளார்.

மாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறும் ஒன்றிணைந்த எதிரணியினர் அரசாங்கத்திற்கு தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.

ஆனால், தேர்தலை பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ நடத்த முடியாத சட்ட சிக்கல்களுக்கு அரசாங்கம் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*