rajitha

அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு ராஜித தகுதியானவர் – மைத்திரிபால

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தகுதியானவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் பிரதித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்தனவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘இந்த நாட்டின் முதலாவது சுகாதார அமைச்சராக இருந்த பண்டாரநாயக்க தமது பதவியிலிருந்து வெளியே வந்து நாட்டின் தலைவராக பதவியேற்றார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுகாதார அமைச்சராக இருந்துவிட்டு வெளியேறி நாட்டின் தலைவராக பதவியேற்றார் என இந்த நிகழ்வில் உரையாற்றும் போது டொக்டர் காலோ பொன்சேக கூறியது மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நானும் அதனையே நினைவுபடுத்துகின்றேன். இருந்த இடத்தில் இருந்துகொண்டோ அல்லது வெளியேறியோ அமைச்சர் ராஜித சேனாரத்னவும் நாட்டின் தலைவராக வரவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்’ என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*