mannar

மன்னாரில் அகழ்வுப் பணி தொடர்கிறது!

மன்னாரில் இன்று(செவ்வாய்கிழமை) 44 ஆவது நாளாகவும் மனித எச்சங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மன்னார், நீதிவான் ரி.ஜே. பிரபாகரனின் மேற்பார்வையிலேயே குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

மன்னார் நகர நுழைவாயிலுள்ள சதொச கட்டட வளாகத்தில், மேற்கொள்ளப்பட்ட நிர்மாண பணிகளின்போது மனித எச்சங்கள் காணப்பட்ட நிலையில், அவற்றை மீட்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், இதுவரையில் 60 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பணிகள் இன்று(செவ்வாய்கிழமை) 44 ஆவது நாளாகவும் விசேட சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில், களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மன்னார் நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையிலேயே இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்றிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ரேடியோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்வற்காகவே இந்த எச்சங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதி நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி கிடைத்ததும், நீதி அமைச்சின் ஊடாக, இந்த எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரேடியோ கார்பன் ஆய்வுகளின் மூலம், எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டவர்களின் வயதைக் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*