sampanthan

நாடு திரும்பும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிறார் சம்பந்தன்!

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பும் மக்களுக்கு முன்னுரிமை திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘யுத்தத்தினால் எமது கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. யுத்தத்தினால் எமது வீடுகள் சேதமாக்கப்பட்டன. இந்தநிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள குடியமர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு மீள குடியமரும் மக்களுக்கு வீடுகள் அத்தியாவசியம். எனவே அந்த தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்’ என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*