knife

மரணவீட்டு வாய்த் தர்க்கம்! வாள்வெட்டில் முடிந்தது!

யாழ்.தென்மராட்சி – வரணி பகுதியில் மரண வீட்டில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இரு குழுக்கழுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மரணச்சடங்கு நிகழ்வின் பின்னர் மோதலாக மாறியதிலேயே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் ராஜ்மிலன் (29), தங்கலிங்கம் (45), சுரேஷ்குமார் (30), கஜன் (27), நவரட்ணம் (50) ஆகிய 5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*