mahinda - sam

புதிய அரசியலமைப்பு திருத்தத்துக்கு மஹிந்தவின் ஆதரவு தேவை என்கிறார் சம்பந்தன்!

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இவற்றையே அண்மையில் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது வலியுறுத்தியதாகவும் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில், இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் மஹிந்தவுடன் ஒற்றை ஆட்சி தொடர்பிலேயே பேசப்பட்டதாக, கஜேந்திர குமார் பொன்னம்பலம் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வினவப்பட்டது. இதனை மறுத்த சம்பந்தன் மஹிந்தவுடன் பேசிய விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போது,

“பகையினை மறந்துவிட்டு தற்போது அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கி, அதன் மூலம் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்க வேண்டியது அவசியம், அதுமட்டுமன்றி இதன் மூலம் தமிழ் மக்களின் நன்மை மட்டுமன்றி, முழு நாட்டின் நமைக்காகவே இதை கேட்கின்றேன். இதை பற்றி தான் சிந்திப்பதாக தெரிவித்தார். அத்துடன் இந்த கோரிக்கையை அவர் மறுக்கவில்லை” என கூறினார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் என் மீது அவநம்பிக்கை கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை என மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*