Sarath-Fonseka1

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவில்லை – பொன்சேகா!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளருக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என தெரிவித்த அமைச்சர் சரத் பொன்சேகா, அனுபவம் வாய்ந்த ஒருவரே வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

களனி பகுதியில்இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், கட்சியின் தலைவரை வெற்றிபெறச் செய்யவே வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

இல்லை எனில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் இருந்த அனுபவம் வாய்ந்த ஒருவரை கட்சித் தலைவர் பெயரிட வேண்டும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி கட்சிக்கு இறக்குமதி செய்த ஒருவரை ஜனாதிபதியாக மீண்டும் கொண்டுவர வேண்டும் மறக்க ஆர்வமில்லாதவர்களுடன் செயற்படத் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*