c-v-k-sivagnanam

அடுத்த அமர்வுக்குள் அமைச்சர் பிரச்சினைக்குத் தீர்வு என்கிறார் சி.வி.கே.சிவஞானம்!

வடக்கு மாகாண அமைச்சர் சபை அடுத்த மாகாணசபை அமர்வுக்கு முன்னர் அமைக்கப்படும் என அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூறியுள்ளார். முதலமைச்சர் மற்றும் ஆளுநருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இந்த நம்பிக்கையை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட. மாகாணசபையின் 128 ஆவது அமர்வில் மாகாணசபை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபை அமர்வில் அமைச்சர் சபை தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கும் அனுப்பிவைக்கப்படும் எனக்கூறப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்டதா? அதற்கு கிடைத்த பதில் என்ன? அவ்வாறு பதில் கிடைக்கவில்லையாயின் சட்டவாக்கப் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தீர்வின்றி காணப்படும். ஆகவே அமைச்சர் சபை தொடர்பான தீர்வு கிடைக்கும் வரையில் சபையை ஒத்திவையுங்கள் என சபையில் மாகாணசபை உறுப்பினர் கே.ச யந்தன் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் 7 அமைச்சர்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன தீர்வு? என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வினவினார்.

இதற்குப் பதிலளித்த அவைத்தலைவர், அமைச்சர் சபை பிரச்சினை தொடர்பாக ஆளுநருடன் நேரடியாக 10 நிமிடங்களும், முதலமைச்சருடன் நேரடியாக 6 நிமிடங்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன்.

இதன்போது சில ஆலோசனைகளை நான் கூறியுள்ளேன். அதனடிப்படையில் இன்று காலை முதலமைச்சர் சபைக்கு வரமுன்னர் என்னோடு சில ஆலோசனைகள் குறித்து பேசியுள்ளார்.

ஆகவே அடுத்த சபை அமர்வுக்கு முன்னர் மாகாண அமைச்சர் சபை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*