Mannar

மன்னாரில் 52 பெட்டிகளில் எலும்புக்கூட்டு எச்சங்கள்!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) 41ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் தலைமையில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள் என்பன சுமார் 52 பெட்டிகளில் அடைக்கப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையொன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியிலிருந்து தொடர்ந்தும் மனித எச்சங்கள் வெளிவந்த வண்ணமுள்ள நிலையில், அகழ்வுப் பணிகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

மன்னார் சதொச விற்பனை நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அகழ்வுப் பணிகள் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அன்றைய நாள் முதல் அங்கிருந்து தொடர்ச்சியாக மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*