Mano-Ganesan-01

புதிய அரசியலமைப்பு அவசியமில்லை – மனோ!

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் சிறிது காலமே உள்ள நிலையில், புதிய அரசியலமைப்பு என்பது வெறும் கனவாகவே அமையுமென தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நாட்டில் தீர்ப்பதற்கு இன்னும் எவ்வளவோ பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், தற்போது புதிய அரசியலமைப்பு அவசியமில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வருடத்திலேயே புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதனை எம்மால் செய்ய முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அது எந்த வகையிலும் சாத்தியமில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*