mahinda - sam

வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்யவே கடன்பெற்றேன் – சம்பந்தனுக்கு சொன்ன மஹிந்த!

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்யவே கடன்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். சீன இராணுவத்தின் 91ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மஹிந்த, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்தார். குறித்த கலந்துரையாடலின் போது மேற்குறித்த விடயத்தை சம்பந்தனிடம் கூறியதாக, ஊடகமொன்றிற்கு மஹிந்த கூறியுள்ளார்.

எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முடங்கிப் போயுள்ளதாக மஹிந்த மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தாம் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னர் கூட்டமைப்பினர் தம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமென சம்பந்தனிடம் கோரியுள்ளார்.

அவ்வாறு செயற்படும் பட்சத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இல்லாவிட்டால் அம்மக்கள் தொடர்ந்தும் பாதிப்பையே எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் சம்பந்தனிடம் மஹிந்த கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*