Maithri-Ranil

மைத்திரி, ரணிலுக்கு நீதிமன்றம் ஆஜராகுமாறு உத்தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை ஒக்டோபர் மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக, போலி ஆவணங்களை வெளியிட்டமையால் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசரனை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்ளவுள்ளமையால் ஆஜராக முடியாது என சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*