gotha

வினைத்திறன் அற்ற நல்லாட்சியின் செயற்பாடு – கோத்தபாய குற்றச்சாட்டு!

நல்லாட்சி அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடு காரணமாக நாட்டின் வளங்களை இழந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம்  கடந்த மூன்று வருடங்களில் நாட்டுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவில்லை. நாட்டின் வளங்களையும் பாதுகாக்க தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகம்  மற்றும் விமான நிலையம்  ஆகியவற்றை பயன்படுத்தி வருமானத்தை பெற்றுக்கொள்ள தவறிவிட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*