jaffna-uni2

யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கறுப்பு யூலை எனக் கூறப்படும் இன்றைய நாளானது தமிழர்களின் மனங்களில் என்றும் மறவாத கறைபடிந்த நாளாகவே பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்தக் கறுப்பு யூலைப் படுகொலை இடம்பற்று இன்று (திங்கட்கிழமை) 35 வருடங்களைக் கடந்திருக்கின்ற நிலையிலையே அதில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்குள் நடைபெற்ற இந் நிகழ்வில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*