manhala

நுண்கடன் நிதி நிறுவனங்களை தண்டிப்பதற்காகவே நுண்கடன் திருத்தச் சட்டம் – மங்கள!

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நுண்கடன் நிதி நிறுவனங்களை தண்டிப்பதற்காகவே நுண்கடன் திருத்தச் சட்டமொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த நுண்கடன் திருத்தச் சட்டத்துக்கான அனுமதி கோரும் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நுண்கடன் நிதி நிறுவனங்கள் அதிகளவான வட்டி வீதங்களுக்கு மக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன.

இதனால் மக்கள் தற்போது பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களே நுண்கடனால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகையால் இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இதுவரை காலமும் 40 சதவீதமாக காணப்பட்ட வட்டி வீதம் புதிய சட்டத்தின்படி 30 சதவீதமாக மாற்றப்படவுள்ளது.

அத்துடன் மக்களால் தற்போது செலுத்த முடியாமல் காணப்படும் நுண்கடனில் 50 சதவீதத்தை அரசாங்கம் செலுத்த தீர்மானித்துள்ளது.

மேலும் மக்களை இந்த நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு கூட்டுறவு மற்றும் தொழில் முயற்சியான்மை திட்டம் ஆகியவற்றின் ஊடாக கடன்கனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*