Ravi-Karunanayake_4_6

தூக்குத்தண்டனை விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்க கருத்து

சட்டம் ஒழுங்கு முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு – காக்கை தீவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போhது அவர் மேலும் கூறுகையில், “தூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. குற்றவாளிகள் தொடர்பான சரியான தகவல்கள் கண்டறியப்பட வேண்டுமானால் ஒழுங்கு முறையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். சட்டம் ஒழுங்கு முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றவாளி ஒருவருக்கு பொலிஸார் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போது அதனை மனித உரிமை மீறல் என ஒருசிலர் அடையாளம் காணுகின்றனர். ஆனால் தேசிய அரசாங்கத்தில் மனித உரிமைகளுக்கும் முதலிடமுள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்றால் நாட்டில் எல்லையற்ற சுதந்திரம் உள்ளதா? என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகள் பெற்று கொடுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் ஆகிய இரண்டுக்கும் சம உரிமை வழங்கி மக்கள் நீதியாக வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தி கொடுப்பதும் அவசியமாக காணப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன் நல்லாட்சி வார்த்தைகளால் மட்டுமல்லாமல் அதனை பிரயோசமுடையதாக மாற்றியமைக்க கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*