vaadi

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை!

வடக்கு – தெற்­கில் வாழும் மீன­வர்­க­ளுக்­கி­டை­யில் பிரி­வினை ஏற்­ப­டுத்த வேண்­டாம். இரு பகு­தி­யி­ன­ரும் ஒத்­து­ழைப்­பு­டன் மீன்­பி­டி­யில் ஈடுப்­ப­டு­வ­தற்கு அர­சி­யல்­வா­தி­கள் ஆத­ரவு வழங்க வேண்­டும். வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கே­ணி­யில் அனு­மதி வழங்­கப்­பட்­ட­வர்­கள் மாத்­தி­ரமே கட­லட்டை பிடி­யில் ஈடுப்­பட முடி­யும். அனு­மதி பெறாது கட­லட்டை பிடி­யில் ஈடுப்­பட்­டால் உட­ன­டி­யாக கைது செய்­யப்­ப­டு­வார்­கள்.

இவ்­வாறு கடற்­தொ­ழில் மற்­றும் நீரி­யல் வளத்­துறை அமைச்­சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா சபை­யில் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று வியா­ழக்­கி­ழமை எழுப்­பப்­பட்­ட­கேள்­விக்கு பதி­ளித்து உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கேணி பகு­தி­யில் கட­லட்டை பிடி­யில் ஈடு­பட வெளி­மா­வட்­டத்­தில் உள்­ள­வர்­க­ளும் வரு­கின்­ற­னர். அதற்கு சட்ட ரீதி­யாக அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளதா?. அனு­மதி பெறாது கட­லட்டை பிடி­யில் ஈடுப்­ப­டு­வோ­ருக்கு எதி­ராக எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்கை என்ன? என்று கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்கு அமைச்­சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா பதி­ல­ளித்­தார்.

அவர் தெரி­வித்­தா­வது,

வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கே­ணி­யில் கட­லட்டை பிடித்­தல் பரு­வங்­க­ளுக்­கேற்ப மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. வெளி­மா­வட்­டத்­த­வர்­கள் ஒரு சில­ருக்கு பருவ காலத்­தில் வடக்கு, கிழக்­கில் வந்து கட­லட்டை பிடி­யில் ஈடுப்­ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. மரு­தங்­கே­ணிப் பகு­தி­யில் அனு­மதி வழங்­கப்­ப­டா­த­வர்­கள் எவ­ரா­வது வந்து கட­லட்டை பிடித்­தால் அவர்­கள் கைது செய்­யப்­ப­டு­வார்­கள். அனு­மதி பத்­தி­ரம் பெற்­ற­வர்­கள் வந்­தால் அது தவ­றில்லை.

வடக்கு – தெற்­கில் வாழும் மீன­வர்­க­ளுக்­கி­டை­யில் பிரி­வினை ஏற்­ப­டுத்த வேண்­டாம். இரு பகு­தி­யி­ன­ரும் ஒத்­து­ழைப்­பு­டன் மீன்­பி­டி­யில் ஈடுப்­ப­டு­வ­தற்கு அர­சி­யல்­வா­தி­கள் ஆத­ரவு வழங்க வேண்­டும். இந்­திய மீன­வர்­களை விடு­தலை செய்­தது போன்று இந்­திய பட­கு­களை விடு­விக்­க­வும் தீர்­மா­னித்­துள்­ளோம்.-என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*