kaanamal

பிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்!

வடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக போராடிவந்த தாய்மார்களில் இதுவரை 14 பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களாலும், தாய்மார்களாலும் வழங்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி இத்தகவல் வெளியாகியுள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு, கிழக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*