RinG

யாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்டமோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்க பல்கலைகழகம், யாழ். பல்கலைகழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாசார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாக யாழ்ப்பாணம் கோட்டையில் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்போது அங்கு எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்துக்குரியது என ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும்,

ஆண் ஒருவரின் மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளமை ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மோதிரத்தில் காணப்படுகின்ற எழுத்துக்கள் 1995 ஆம் ஆண்டுக்கு பிற்பாடே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியிருப்பதாக தெரியவருகிறது.

குறித்த மோதிரத்தில் காணப்படுகின்ற எழுத்து பொறிக்கும் முறை 1995 ஆம் ஆண்டுக்கு பின்னரே நடைமுறைக்கு வந்ததாக தொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த மோதிரத்துடன் காணப்பட்ட எலும்புக்கூட்டுக்கு சொந்தக்காரர் 1995 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*