Mannar

மன்னாரில் கட்டியணைத்த நிலையில் எலும்புக் கூடுகள் மீட்பு!!

அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் விற்பனை நிலைய வளாகத்திலிருந்து சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஒருவரையொருவர் கட்டி அணைத்தவாறு இருப்பது போன்று அருகருகே குறித்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பெண்களின் காப்பு போன்றதொரு தடயப் பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (புதன்கிழமை) 36ஆவது நாளாக மனித எச்சங்களை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போதே இந்த சந்தேகத்திடமான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை 40 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளிலிருந்து தற்போது எலும்புக்கூடுகளை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவ்வாறு வெளியேற்றப்படும் எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தில் ஒரு அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*