joint-oppostition

சம்பந்தனின் பதவி பறிப்புக்காக சபாநாயகரை சந்திக்கிறது ஒன்றிணைந்த எதிரணி!

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை விடுப்பதற்காக, சபாநாயகர் கரு ஜயசூரியவை ஒன்றிணைந்த எதிரணி சந்திக்கவுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணி சார்பில் 70 உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) மாலை சபாநாயகரை சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

தமது கட்சி கூடி ஆராய்ந்தபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாவும், அரசாங்கத்திலிருந்து விலகிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் 13 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாகவும் ஒன்றிணைந்த எதிரணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியில் 92 பேரில் 70 பேர் தினேஸிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் டளஸ் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*