saliya

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிப்பது உடனடிச் சாத்தியமில்லையாம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை உடனடியாக கண்டு பிடிப்பது என்பது கடினமான விடயம் ஆனால் பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தி இதற்கான நகர்வை ஆரம்பிக்க முடியும் என்று காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் ,காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நேற்று இரண்டுக்கும் மேற்பட்ட அமர்வுகளாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் சாலிய பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டு பிடிப்பதற்கு எமது ஓ.எம்.பி அலுவலகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீங்கள் எமக்கு தரும் தகவல் தான் உறவுகளை கண்டு பிடிக்க வழிவகைகள் செய்யும். எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள் என்றார்.
கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்க்ளின் உறவுகள் தெரிவித்ததாவது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் எம்மை அங்கு வா இங்கு வா என்று அழைக்கின்றார்கள்.எமக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பி அங்கு போவோம்.ஆனால் எந்த பயனும் இல்லை. எம்மை கவனிப்பார் எவரும் இல்லை.வருவார்கள் படம் பிடிப்பார்கள் போவார்கள். நிவாரணம் தந்து எங்கள் கண்களை மறைக்க வேண்டாம். எங்களுக்கு ஒரு தீர்வை சொல்லுங்கள் என்றனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகள் கேட்டு அறியப்பட்டதோடு,இழந்த உறவுகள் தொடர்பான உறுதிப் படுத்தும் ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*